תוכן עניינים:
- 1. קרם לחות רך וקליל של NIVEA
- 2. קרמי לילה מחזירים את הימלאיה צמחי מרפא
- 3. קרם יום קרם עור של הימלאיה
- 4. קרם הוגנות מיידי זוהר מיידי של אור לבן טבעי
- 5. קרם עור מזין הימלאיה
- 6. קרם יום יופי לבן של Pond Anti Spot Fairness SPF 15 יום
- 7. Lakme Absolute Perfect Radiance הבהרת עור / קרם לילה
- 8. Garnier Skin Naturals Light Serum Cream SPF 19
- 9. קרם פנים מולטי ויטמין מתקדם והוגן
- 10. לוריאל פריז סקין פרפקט 20+ נגד פגמים
- 11. קרם ג'ל להלבנת העור והלבנת העור של לוטוס הרבלס וויטגלו
- உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற க்ரீம்களை எப்படி தேர்ந்தெடுப்பது
- முடிவுரை
எண்ணெய் பசை சருமம் என்றால் மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டிய சருமம் என்பதுதான் உண்மை. இவர்களுக்கு முதுமை பருவ தோற்றங்கள் வெகு விரைவில் ஏற்படாது என்பது இதன் கூடுதல் நன்மைதான். ஆனால் அழகாக தோற்றமளிக்க வேண்டிய இளமைக்காலங்களில் எண்ணெய் வழியும் முகம் கொண்டிருப்பது மிகப்பெரும் அவஸ்தைதான் அல்லவா.
நாள் முழுதும் உங்கள் முகத்தை அதன் புத்துணர்ச்சி குறையாமல் பார்த்துக் கொள்ளக்கூடிய சில முக க்ரீம் வகைகளை இங்கே வரிசைப்படுத்தி இருக்கிறேன். உங்களுக்கு பிடித்த மற்றும் அவசியமான முக க்ரீமை நீங்கள் தேர்ந்தெடுங்கள்.
1. קרם לחות רך וקליל של NIVEA
வெயில் காலங்களில் நீங்கள் பயன்படுத்த ஏற்றது. இதன் பிசுபிசுப்பற்ற தன்மை உங்கள் எண்ணெய்ப்பசை சருமத்திற்கு ஏற்றது. இதன் லேசான தன்மை உங்கள் முகத்தை அதிக எண்ணெய் வழியும் ஆபத்தில் இருந்து காக்கிறது. சூரியனின் புற ஊதாக்கதிர்களின் தீமையில் இருந்து உங்களை காக்கிறது.
நன்மைகள்
- லேசான தன்மை
- பிசுபிசுப்பற்றது
- பாதாம் எண்ணெய் மற்றும் லேசான வாசனை கொண்டது
- மென்மையான சருமம் உத்திரவாதம்
- UV பாதுகாப்பு கொண்டது
தீமைகள்
- எதுவும் இல்லை
2. קרמי לילה מחזירים את הימלאיה צמחי מרפא
ஹிமாலயாவின் மற்றுமொரு தயாரிப்பான இந்த இரவு நேர க்ரீம் உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கிறது. உங்கள் சரும செல்களுக்கு புத்துயிர் தருகிறது. இரவு நேரங்களில் பூசுவதன் மூலம் தூசு கிருமிகள் தாக்காமல் இருப்பதால் அதிகமான பலனை தருகிறது
நன்மைகள்
- சருமத்தின் மிருது தன்மை மீட்கப்படுகிறது
- சருமத்தை பாதுகாத்து சிகிச்சை அளிக்கிறது
- வெள்ளை லில்லி மற்றும் தக்காளி நிறத்தை மேம்படுத்த உதவுகிறது
- இரவு நேர பயன்பாட்டிற்கானது
தீமைகள்
- எதுவும் இல்லை
3. קרם יום קרם עור של הימלאיה
ஹிமாலயாவின் இந்த தயாரிப்பு உங்கள் எண்ணெய்ப்பசை சருமத்திற்கு ஏற்றாற் போல பிசுபிசுப்பு தன்மை அற்றது. சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. சாதாரண சருமத்தினருக்கு ஏற்றது.
நன்மைகள்
- மிக லேசான க்ரீம் வகையை சார்ந்தது
- கோதுமை புல் மற்றும் மலை ஆப்பிள் நிறமேம்பாடுக்கு உதவி செய்கிறது
- உங்கள் முகம் இளஞ்சிவப்பு நிறமாக காரணமாகிறது
- பேரபின்கள் இதில் இல்லை
- சூரியனின் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து காக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
4. קרם הוגנות מיידי זוהר מיידי של אור לבן טבעי
சருமத்தில் இருக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட செல்களை அதிகரிப்பதும் அதற்கு புத்துயிர் கொடுப்பதும் இந்த க்ரீமின் வேலையாகும். சருமத்தின் இளகும் தன்மையை காக்கிறது. கிடைத்தற்கரிய கடல் பொருள்கள், உள்ளிருக்கும் செல்களை இன்பியூஸ் செய்யும் அமினோ பெப்டைட் காம்ப்ளெக்ஸ் இதில் இருப்பது இதன் சிறப்பு.
நன்மைகள்
- செல்களின் அடர்த்தியை அதிகரிக்கிறது
- செல்களுக்கு புத்துயிர் தருகிறது
- இன்பியூஸ் செய்யப்பட்டது
- கண்கள், தாடை மற்றும் கழுத்து பகுதி விரைவில் முதிர்ச்சி அடையாமல் காக்கிறது
தீமைகள்
- எதுவும் இல்லை
5. קרם עור מזין הימלאיה
ஹிமாலயாவின் இந்த தயாரிப்பு எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கு தேவையான பராமரிப்பை வழங்குகிறது. சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது.அனைத்து சரும வகையினரும் பயன்படுத்தலாம்.
நன்மைகள்
- லேசானது
- பிசுபிசுப்பற்றது
- மூலிகைகள் அடங்கியது
- விலை மலிவானது
தீமைகள்
- எதுவும் இல்லை
6. קרם יום יופי לבן של Pond Anti Spot Fairness SPF 15 יום
பாண்ட்ஸின் இந்த க்ரீம் உங்கள் சரும நிறத்தை அதிகரிக்க உதவி செய்கிறது. இதில் இருக்கும் ஜென் வைட் பார்முலாவானது க்ரீம் உங்கள் சருமம் உடனே உறிஞ்சிக்கொள்ளும் தன்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆகவே பிசுபிசுப்பு என்பது துளியும் இருக்காது. வாடிய முகத்தையும் புத்துணர்வோடு காட்ட கூடிய தன்மை கொண்டது.
நன்மைகள்
- SPF 15, PA ++ கொண்டது
- கரும்புள்ளிகளை நீக்குகிறது
- சரும நிறத்தை அதிகரிக்கிறது
- பிசுபிசுப்பு அற்றது
தீமைகள்
- சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கானது அல்ல
7. Lakme Absolute Perfect Radiance הבהרת עור / קרם לילה
இந்த க்ரீமின் சிறப்பு என்ன என்றால் இதில் விட்டமின்கள் மற்றும் மைக்ரோ கிறிஸ்டல்கள் இன்ஃயூஸ் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால் உங்கள் முகம் பிரகாசமாக காலை முதல் மாலை வரை அப்படியே இருக்கிறது. இதில் சன்ஸ்க்ரீன் இருப்பதால் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
நன்மைகள்
- லேசானது
- பிசுபிசுப்பு அற்றது
- அற்புதமான நறுமணம் கொண்டது
தீமைகள்
- இதன் மூலப்பொருள்கள் குறித்த தகவல்கள் இல்லை
8. Garnier Skin Naturals Light Serum Cream SPF 19
இந்த க்ரீம் வைட்டமின் சி சீரம் மற்றும் எலுமிச்சையின் நற்குணங்களை கொண்டுள்ளது. அதனால் சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் கரும்புள்ளிகள் மற்றும் பரு அடையாளங்களை போக்குகிறது. உங்கள் சரும நிறத்தை ஏழு நாட்களில் அதிகரித்துக் காட்டுகிறது
நன்மைகள்
- SPF 19 மற்றும் PA +++ அடங்கியது
- நயாசினமைட் கொண்டுள்ளது
- தோல் நோய் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
தீமைகள்
- சிலமணி நேரங்களுக்கு பின்னர் சருமம் எண்ணெய் வடிய ஆரம்பிக்கலாம்.
9. קרם פנים מולטי ויטמין מתקדם והוגן
இந்த க்ரீமானது சருமத்தில் தோன்றும் பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது. டல்லான முகம், நிறம் குறைந்த முகம், சூரியனின் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் கருமை மற்றும் கருவளையங்களை நீக்குகிறது. இதில் வைட்டமின் பி 3, சி மற்றும் பி 6 அடங்கியிருக்கிறது. அதனால் உங்கள் முகம் முன்னிலும் பிரகாசமாக காட்சியளிக்கிறது.
நன்மைகள்
- தோல் நோய் நிபுணர்களால் அங்கீகரிக்கப்பட்டது
- அனைத்து வகை சருமத்தினருக்கும் ஏற்றது
- நல்ல நறுமணம் கொண்டுள்ளது
தீமைகள்
- வெண்மை நிற படலத்தை முகத்தில் ஏற்படுத்தும்
10. לוריאל פריז סקין פרפקט 20+ נגד פגמים
இது 20 வயதிற்கும் அதற்கு மேம்பட்டவர்களுக்குமானது. க்ளென்சிங் ஃபோம் கொண்டது.இதில் இருக்கும் பெர்லைட் சருமத்தின் எண்ணெய்த்தன்மையை உறிஞ்சுகிறது, பருக்கள் வராமல் தடுக்கிறது உங்கள் சருமத்தின் பருவ வயது மாற்றங்களை சமன் செய்கிறது.
நன்மைகள்
- சருமத்தை பிரகாசமாக மாற்றுகிறது
- முகத்தில் பருக்கள் வராமல் காக்கிறது.
- எண்ணெய்த்தன்மை ஏற்படாமல் காப்பாற்றுகிறது
- இதன் ப்ரோ கொலாஜென் சுருக்கங்கள் மற்றும் கோடுகளை நீக்குகிறது.
- சரும நிறத்தை அதிகரிக்கிறது
தீமைகள்
- ரசாயனங்கள் கொண்டது
11. קרם ג'ל להלבנת העור והלבנת העור של לוטוס הרבלס וויטגלו
இதன் ஜெல் அடிப்படையான பார்முலா உங்கள் சருமத்தை சூரியனின் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது. பழங்கங்களின் ரசங்களின் மூலம் எடுக்கப்பட்ட எசென்ஸ் இதன் தனித்தன்மை எனலாம். இது உங்கள் எண்ணெய் பசை சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. இதன் திராட்சை ரச எசென்ஸ் உங்களுக்கு நிறம் அதிகரிக்க உதவுகிறது. மல்பரி உங்கள் கருந்திட்டுக்களை போக்குகிறது. பால் உங்கள் முகத்தில் மெலனின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துகிறது.
நன்மைகள்
- தாவர எண்ணெய்கள் மற்றும் பழரச எசென்ஸ் கொண்டது
- லாக்டிக் அமிலம் கொண்டுள்ளது
- SPF 25 PA்றும் PA +++ கொண்டது
- ஜெல் க்ரீம் என்பதால் எண்ணெய் வழியுமோ என்கிற பயமில்லை
தீமைகள்
- பேரபின்கள் இருக்கிறது
- செயற்கையான மணமூட்டும் பொருள்கள் உள்ளன
உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற க்ரீம்களை எப்படி தேர்ந்தெடுப்பது
- உங்கள் சருமம் எந்த வகை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
- அதிக பிசுபிசுப்பு தன்மை கொண்ட க்ரீம்களை வாங்க வேண்டாம்
- லேசான தன்மை கொண்ட க்ரீம்கள் எல்லா வகை சருமத்தினருக்கு ஏற்றது
- லைனோலின் க்ளிசரின் போன்றவை இருந்தால் சருமம் மென்மையாக இருக்கும்
- சன்ஸ்க்ரீன் பாதுகாப்பு அந்த க்ரீமில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்
- இரவு உறங்கும் முன்பு ரெட்டினால் கொண்ட ஒரு க்ரீமை உங்கள் முகத்தில் தடவுவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் சரியான சிகிச்சை ஆகும்.
முடிவுரை
எண்ணெய்ப்பசை சருமம் என்கிற கவலை இல்லாமல் மேற்கண்ட கிரீம்களில் உங்களுக்கு உகந்த கிரீமினை வாங்கி பயன்படுத்துங்கள். உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தையும் அதன் நிறத்தையும் மேம்படுத்துங்கள். குறையற்ற அழகுடன் ஜொலிப்பது கூடுதல் தன்னம்பிக்கை தரும் என்பதை மறவாதீர்கள்.